Over 10 years we help companies reach their financial and branding goals. Engitech is a values-driven technology agency dedicated.

Gallery

Contacts

411 University St, Seattle, USA

engitech@oceanthemes.net

+1 -800-456-478-23

ஜம்புலிங்கம் முதலியார் வரலாறு

ராவ் பகதூர் தி. மா. ஜம்புலிங்கம் முதலியார் (22.06.1890 - 28.10.1970)

இவர் ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், அரசியல்வாதியும், மக்கள் சேவகரும் ஆவார். இவர் நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டறிந்து, நெய்வேலி நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அமைக்க காரணமாகவும், நிறுவனம் அமைய 620 ஏக்கர் விளைநிலத்தை தானமாக கொடுத்தவரும் ஆவர்.

பிறப்பு

அன்றைக்கு தென்னார்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கடலூர் வட்டத்தில் பண்ருட்டி அருகில் திருக்கண்டலேஸ்வரம் என்ற கிராமத்தில் செங்குந்த கைக்கோளர் மரபில் வசதிவாய்ந்த பெருநிலக்கிழார் தி.வீ. மாசிலாமணி முதலியார் – சொர்ணத்தம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் குடும்பம் பெரும் அளவில் ஜவுளி மற்றும் விவசாயம் செய்து வந்தனர். இவர் கடலூர் மற்றும் மெட்ராசில் கல்வி பயின்றார். இவர் 1911 ஆம் ஆண்டில் விஜயலட்சுமி அம்மாளை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆறு பெண் குழந்தைகள்.

வகித்த பதவிகள்

தென்னார்க்காடு மாவட்டத்தில் தாலுகா போர்டு மெம்பர் ஆக இருந்துள்ளார் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார்.

கடலூர் தாலுக்கா போர்டு தலைவராக 6 ஆண்டுகளும், ஜில்லா போர்டு மெம்பர் ஆக மூன்று ஆண்டுகளும் பணியாற்றினார்.

ஜில்லா போர்டு தலைவராக மூன்று ஆண்டுகளும் பதவி வகித்தார்.

கடலூர் நகராட்சியில் நகர மன்ற உறுப்பினராக மூன்று ஆண்டுகளும், நகர்மன்றத் துணைத் தலைவராக 6 ஆண்டுகளும், நகர மன்ற தலைவராக மூன்று ஆண்டுகளும் பணியாற்றினார்.

நெல்லிக்குப்பத்தில் பேரூராட்சி தலைவராக 20 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

நெல்லிகுப்பம் கூட்டுறவு மேற்பார்வை ஒன்றிய தலைவராக பணியாற்றினார். இந்திய சுதந்திர போராட்டத்திற்கு அவர் பலமுறை நிதி உதவி வழங்கியுள்ளார்.

இவர் தென் ஆற்காடு மாவட்டம் தொழுநோய் கவுன்சில் மற்றும் கடலூர் நகராட்சியின் துணைத் தலைவராக பணியாற்றினார். இவர் தென் ஆற்காடு மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கி செயற்குழுவின் இயக்குநராகவும் உறுப்பினராகவும் பணியாற்றினார். கடலூர் நகராட்சி கவுன்சிலராக பணியாற்றினார்.

இந்தியர்களிடையே உயர் கல்வியை வளர்ப்பதற்காக மெட்ராஸ் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக பணியாற்றினார். இவர் தென் ஆற்காடு மாவட்ட இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் கடலூரின் மருத்துவமனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினராக பணியாற்றினார்.

ஜம்பூலிங்க முதலியார் மற்றும் அவரது சகோதரர் பழனிசாமி முதலியார் ஆகியோர் பிரிட்டிஷ் காலத்தில் கடலூர் படலீஸ்வரர் கோயில் மற்றும் திருகாண்டேஸ்வரம் நடனாபடேஸ்வரர் கோயில் ஆகியவற்றில் பல லட்சம் மதிப்புள்ள பணிகளை நன்கொடையாக வழங்கினர். பல கோயில்களின் அறங்காவலராகவும், தென் ஆற்காடு மாவட்ட இந்து கோவில் மேம்பாட்டுக் குழுவின் தலைவராகவும், ஜில்லா வாரிய தலைவராகவும் கவும் இருந்துள்ளார்.

இவர் கடலூர் சிறைச்சாலைக்கு அதிகாரப்பூர்வமற்ற பார்வையாளராகச் சென்று அங்குள்ள கைதிகளின் மறுவாழ்வுக்கு பல்வேறு வழிகளில் உதவினார்.

செய்த மக்கள் பணிகள் தொகு
நெல்லிக்குப்பம் பேரூராட்சி தலைவராக இவர் பணியாற்றிய காலத்தில் நெல்லிகுப்பம் சர்க்கரை ஆலை முழுமூச்சாக கொண்டு வந்து பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தியது.

புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட தனது சொந்த செலவில் முழு முனைப்புடன் ஈடுபட்டு அரசிடம் அனுமதி பெற்று பொதுமக்களுக்காக பாலத்தை கட்டி கொடுத்தார்.

இவர் மெட்ராஸ் மாகாண சாலை வழி வாரியத்தின் உறுப்பினராகவும், தென்னிந்திய ரயில்வே ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

சேலம் கடலூர் தொடர்வண்டி பாதை அமைக்க இவர் அரசிடம் பல வழியில் அணுகியபோது அரசு குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு தினமும் 50 நபர்கள் கடலூர் சேலம் பேருந்து போக்குவரத்தில் இருந்தால்தான் சேலம் கடலூர் தொடர்வண்டிப் பாதை அமைக்க அனுமதி கொடுக்க முடியும் என்று கூறி விட்டது. சேலம் கடலூர் தொடர்வண்டி பாதை உருவானால் இரு மாவட்டங்களும் வளர்ச்சியடையும் என்று கருதிய ஜம்புலிங்க முதலியார் தனது தோட்டத்தில் வேலை செய்யும் 50 நபர்களை சொந்த செலவில் ஒரு வருடத்திற்கு தினமும் சேலம் கடலூர் பாதையில் பேருந்துகளில் பயணிக்க வைத்து சேலம் கடலூர் தொடர்வண்டி பாதை திட்டத்தை பெற்றுத்தந்தார்.

குற்றப் பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மதுரை பிரமலைக் கள்ளர் மக்களை தென்னார்க்காடு மாவட்டத்தில் அசிஸ் நகர் செட்டிலெமென்ட் என்று உருவாக்கி ஆங்கிலேய அரசு இந்த மக்களை கொடுமைப்படுத்தியது. குற்றப்பரம்பரைச் சட்டத்தில் கைதாகி அசிஸ் நகர் செட்டிலெமென்ட்யில் அடைக்கப்பட்டு இருந்த மக்களுக்கு அடிப்படை வசதி, உணவு கூட இல்லாமல் இருந்த நிலையில் ஜம்புலிங்கம் முதலியார் அங்கு சென்று அவர்களுக்குத் தேவையான அடிப்படை உணவு மற்றும் வசதிகளை செய்து தந்தார்.

தென் ஆற்காடு மாவட்ட படையாட்சி வன்னியர் சமூகத்தின் மீதி போடப்பட்ட குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடி இந்த சட்டத்தை திரும்பப் பெற வைத்தார் ஜம்புலிங்க முதலியார்.